tamilnadu

img

ஜெட் ஏர்வேஸ்சின் பங்கு விலை 14% தொடர் வீழ்ச்சி

ஜெட் ஏர்வேஸ் பங்கு விலை 14 சதவிதம் தொடர் வீழ்ச்சி அடைந்துள்ளது. 

ஜெட் ஏர்வேஸ் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியதால், விமானங்களுக்கு குத்தகை பாக்கி, அன்றாட செயல்பாடுகளுக்கான நிதி இல்லாதது, ஊழியர்களுக்கு சம்பள பாக்கி உள்ளிட்ட பிரச்சினைகளால் கிட்டத்தட்ட தன்னிடமிருந்த 119 விமானங்களையும் தரையிறக்கிவிட்டது. 

ஜெட் ஏர்வேஸுக்கு கடன் கொடுத்த வங்கிகள் எஸ்பிஐ தலைமையில் ஒன்றுகூடி நிர்வாகத்தைக் கைப்பற்றின. ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதை அடுத்து, இன்று பங்கு சந்தையிலும் அதன் வீழ்ச்சி காணப்படுகிறது. முதலீட்டாளர்கள் மேலும் ஜெட் ஏர்வேஸில் முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று, இந்திய பங்கு சந்தையில் ஜெட் ஏர்வேஸ்ஸின் பங்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. அதுவும் இந்திய பங்கு சந்தைகளான என்.எஸ்.சி மற்றும் பி.எஸ்.இ ஆகிய இரு சந்தைகளிலும் வீழ்ச்சியடைந்து வருகிறது. தற்போதைய சூழலில் பங்கின் விலை 14 சதவிகிதம் வீழ்ச்சியடைந்து 141 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

இதற்கிடையில் வங்கிகள் தரப்பு தருவதாக சொன்ன அவசர நிதியைத் தராமல் கைவிரித்த நிலையில் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் அருண் ஜெட்லி சந்தித்து பேசி உள்ளனர். அருண் ஜேட்லி அவர்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்ததோடு நான்கு முதல் ஐந்து வாரங்களில் ஜெட் ஏர்வேஸ் பங்கு விற்பனையில் தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்துள்ளார். 


;